திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் அண்மையில் ஆட்சியரை சந்திக்க திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் சென்றபோது ஆட்சியர் மீனவர்களை அலுவலகத்தின் உள்ளே அனுமதிக்காமல் இழிவுபடுத்தி, அவமதித்து அனுப்பியதாக கூறி வரும் 1ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக மீனவர்கள் அறிவித்தனர். சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக மீனவர்கள் அறிவிப்பு செய்துள்ளனர்