தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சகோதரர்கள் மீதான அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக சொத்து குவிப்பு வழக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ் வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.