தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான தெப்பக்குளம் அமைந்துள்ளது இங்கு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தெப்பத் திருவிழா மற்றும் சங்கர ராமேஸ்வரர் பாகம்பரியால் ஆலய தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் தெப்பக்குளத்தில் அதிக அளவில் மீன்கள் காணப்படுவதால் மாலை வேலைகளில் பொதுமக்கள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் வந்து மீன்களுக்கு உணவளித்து தங்கள் பொழுதை கழிப்பார்கள். இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணி நடந்தது.