தூத்துக்குடி: மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை காலை ஆறு முப்பது மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 1083.70 மிமீ மழை பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் விடிய, விடிய மழை பெய்தது. மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.