கடந்த 11.11.2025 அன்று தெர்மல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தெர்மல் நகர் பகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் ரீதன் (21) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சதீஷ் (24) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.