தூத்துக்குடி: அத்திமரபட்டி, குலையன் கரிசல், காலங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மழைநீர் தேங்கி பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தின் கயத்தாறு மணியாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் கோரம்பள்ளம் குளத்தை வந்தடைந்தது கோரம்பள்ளம் குளத்திற்கு 500 முதல் சுமார் 1000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.