ஏரல்: ஆழ்வார்திருநகரில் சிறுவனை கத்தியால் குத்திய தலைமை காவலர் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் சிவனேசன்(41). இவர் ஏரல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக ஆழ்வார்திருநகரி பேருந்து நிலையத்திற்கு பைக்கில் வந்துள்ளார். அப்போது அங்கு செந்தில்குமார் என்ற இளைஞர் பைக்கில் வேகமாக வந்துள்ளார். அப்போது ஏன் இப்படி வேகமாக செல்கிறாய் என்று கண்டித்துள்ளார்.