ஆண்டிமடம்: வாரியங்காவல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்த, மரங்கள் வெட்டப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்த வேப்பமரம், புங்கை மரம் உள்ளிட்ட நாட்டு இன மரங்களை வெட்டி வண்டியில் ஏற்ற முயற்சித்த போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மரங்களை ஏன் வெட்டினீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.