தருமபுரி: புற ஆதாரம், ஒப்பந்தமுறை பணி நியமனத்தை கைவிட கோரி நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
18- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நல அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை 3 மணி அளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. நிலம் சார்ந்த அனைத்து பராமரிப்பு பணிகளையும் கருத்தில் கொண்டு, இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதலில் உள்ள மனித சக்திக்கு மீறிய பணி குறியீட்டினை குறைக்க வேண்டும்.