திருவள்ளூர் அடுத்த கடம்பத்துார் ஒன்றியம், அதிகத்துார், இந்திரா நகரை சேர்ந்தவர் முத்துசாமி (70). இவர் எல்ஐசி முகவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் இன்று மதியம் தனது டிவிஎஸ் மொபட்டில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருவள்ளூர் ரயில்வே மேம்பாலத்தில் சென்ற போது பின்னால் வந்த டிப்பர் லாரி அவரின் மொபட் மீது மோதி லாரி சக்கரம் அவர் தலை மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.