தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் கலந்து கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.