வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பாலாற்றில் முள், செடிகள் அதிகம் நிறைந்த இடத்தில் இன்று காலை நவகிரக எட்டுசிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சிலைகள் எந்த கோயிலை சேர்ந்தது சிலைகள் எங்கிருந்து எடுத்து வந்து இங்கு வைக்கப்பட்டது என்பது குறித்து வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.