வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சுன்னத் வல் ஜமாஅத் மசூதியில் தொழுகை முடிந்து வெளியே வந்த 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களிடம் அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். வாலாஜாபாத் பேரூர் கழக செயலாளர் ஏற்பாட்டில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் அக்ரி நாகராஜன் மற்றும் அதிமுகவினர் துண்டு சீட்டு வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.