தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜன் இன்று தனது மனைவி குமுதாவுடன் காரில் சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது, கார் திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த சுங்கச்சாவடி விளம்பர பலகை தடுப்பு பைப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குமுதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.