ராமேஸ்வரத்தில் இருந்து வட மாநில பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து அந்த வண்டியின் மீது மோதியதில் அரசு பேருந்தில் முன்பக்கம் சேதம் அடைந்தது. அரசு பேருந்து வேகமாக மோதியதில் கருவேல மரங்களை அரைக்கும் இயந்திரம் சேதமடைந்து சென்டர் மீடியனை தாண்டி எதிர் திசையில் இருந்து வாகனங்கள் வரும் மற்றொரு சாலையின் நடுப்பகுதியில் நின்றது. விபத்தில் சிக்கி சாலையின் நடுப்பகுதியில் நின்ற கருவேல மரங்களை அரைக்கும் இயந்திரம் கிரேன் உதவியின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது