சென்னை பூந்தமல்லியை அடுத்த குத்தம்பாக்கம் பகுதியில் 414 கோடி ரூபாய் மதிப்பில் 25 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் பணிகளை இன்று அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டார். அப்போது அமைச்சர் நாசர் மற்றும் பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேகர் பாபு நவம்பர் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் கொண்டுவரப்படும் என தெரிவித்தார்