கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் கரிமேடு பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் கண்ணாடி விரியன் பாம்பு இருப்பதாக பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் வந்தது அந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற அவர்கள் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்