திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் நேற்று முதல் பெண் யானை உடல் மெலிந்த நிலையில் குட்டியுடன் முகாமிட்டு வந்தது, இந்நிலையில் இன்று பள்ளங்கி,கோம்பை பகுதி அருகே கணேசபுரம் பகுதியில் உள்ள செல்வம் என்பவரது தனியார் தோட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை சரிந்து கீழே விழுந்தது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் 5 மணி நேரத்திற்கு பிறகு பெண் யானைக்கு குளுக்கோஸ்,ஆண்டி பயாடிக் மயக்க மருந்துகள் உள்ளிட்டவை செலுத்தப்பட்டு வருகிறது.