இந்திய கடல்சார் ஆய்வு மையம் குமரி மாவட்ட கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் பிறப்பித்துள்ளது நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள மீனவ கிராமங்களில் கடற் பகுதியில் பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்த பேரலை வரும் மூன்றாம் தேதி இரவு வரை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது எனவே கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் படங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது