சிவகங்கை மாவட்டம் மு.கோவிலாபட்டியில் மூதாட்டி ஒருவர் முதியோர் உதவித்தொகை வரவில்லை என அமைச்சர் பெரியகருப்பனிடம் கோரிக்கை வைத்தார். அமைச்சர் உடனடியாக அதிகாரியை தொலைபேசியில் அழைத்து உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்தார். மேலும், கையில் இருந்த தொகையை மூதாட்டிக்கு வழங்கி ஆறுதல் கூறினார்.