பெரியார் நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே பழுதுபடைந்து எலும்பு கூடு போல காட்சி அளிக்கும் மின்கம்பம் உள்ளது.மேலும் அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே உடைந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்து மின்துறை அதிகாரிகளுக்கு பகுதி மக்கள் பலமுறை மின்கம்பத்தை மாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில் மின்துறை அதிகாரிகள் செவி சாவிக்காமல் உள்ளனர். மேலும் இந்த மின்கம்பம் உடைந்து விழுந்தால் மிகப்பெரிய உயிர் சேதம் நடக்கும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் எனவே இந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்றி தர வேண்டும் என அப்பகுதியை ராமமூர்த்தி கோரிக்கையும் வைத்தார்