காரைக்குடி அண்ணாநகர் 7வது வார்டில் செயல்படும் ரேஷன் கடையில்,1500 ரேஷன் கார்டுகள் உள்ளன.அனைத்து கார்டுகளுக்கும் ஒரே கடையில் பொருட்கள் வழங்கப்படுவதால்,முறையாக வினியோகம் செய்யப்படுவதில்லை.மாதத்தில் 2-3 நாட்கள் மட்டுமே விற்பனையாளர் வருவதாகவும், சரியான நேரத்தில் கடை திறக்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.இன்று காலை 11மணிக்கு வந்த விற்பனையாளர் பாயின்ட் ஆப் சேல் கருவி பழுது என கூறியதால் பொதுமக்கள் விற்பனையாளரிடம் வாக்குவாதம் செய்தனர்