கோவில்பட்டி புது கிராமம் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் சார்பில் புதன்கிழமை காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக ரயில் நிலையத்தில் இருந்து 1008 பால்குட ஊர்வலம், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதனை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் சிறுவர் சிறுமிகள் பல்வேறு கடவுள்களின் வேடம் அணிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.