பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, சாலை கிராமத்தில் ஸ்ரீ வரகுணேஸ்வரர் ஆலயத்தில் காப்பு கட்டுதல் நிகழ்வு இன்று நடைபெற்றது. ஸ்ரீ முருகன் வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டுதல் நடைபெற்ற பின்னர், பக்தர்களும் காப்பு கட்டி கொண்டனர். இந்த நிகழ்வில் சாலை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.