சிவகங்கை மாவட்டம், மு.கோவில்பட்டியில் பால் வாங்க வந்த அக்கா கவி பிரபாவும் தங்கை சாதனாவும் இருசக்கர வாகனத்தில் வந்தனர். வேகமாக வந்த அரசு பேருந்து மோதியதில் சாதனா உயிரிழந்தார், கவி பிரபா படுகாயமடைந்தார். உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் வரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.எஸ்.வி.மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.