திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கம்பட்டியில் சித்தர் என்றழைக்கப்படும் ஸ்ரீ சற்குரு பழனிச்சாமி ஜீவசமாதி உள்ளது. அங்கு ஏராளமான பக்தர்கள் வழிபடுவது வழக்கம் அதைத் தொடர்ந்து அமாவாசை பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சற்குரு பழனிச்சாமி ஜீவசமாதியில் கரூர் கொங்கு கோலாட்ட குழு சார்பில் 60க்கும் மேற்பட்ட வள்ளி கும்மியாட்டம் கோலாட்டம் நடைபெற்றது.