அய்யம்பட்டி ஸ்ரீ கழுங்கு முனிஸ்வரர் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 16 காளைகள் களமிறக்கப்பட்டன மற்றும் 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் சிறந்த காளைகளுக்கும், காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.