திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் கத்தோலிக்க திருச்சிலுவை அருட் சகோதரிகளால் நடத்தப்படும் லயனார்டு மருத்துவமனையில் இதய ரத்த குழாய் அடைப்பை கண்டறிந்து சீர் செய்யும் ஆய்வகம் தொடங்கப்பட்டது. இத்தாலி நாட்டிலிருந்து வழங்கப்பட்ட இந்த இதய நோய் மருத்துவ ஆய்வகத்தை கத்தோலிக்க திருச்சபை மதுரை மண்டல முன்னாள் பேராயர் அந்தோணி பாப்பு சாமி திறந்து வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்தார்.