செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் கிராம பொதுமக்கள் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதியின்றி தினந்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர், திருக்கழுக்குன்றம் புறவழி சாலையிலிருந்து ஒரகடம் செல்லும் நான்கு கிலோமீட்டர் சாலையில் 300 மீட்டர் சாலை மட்டும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் சாலையை சீரமைக்க வனத்துறை அனுமதி மறுத்து வருகிறது இதனால் 300 மீட்டர் சாலையை சரி செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது,