உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு பெருவிழா நாளை மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. வருடா வருடம் ஆகஸ்டு 29ஆம் தேதி தொடங்கும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேர்வு பவனி வருகின்ற ஏழாம் தேதி நடைபெற உள்ளது. வேளாங்கண்ணி திருவிழாவில் பங்கேற்க தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளா ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணி நோக்கி வந்துள்ளனர்.