ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்து விட்டு தங்களது சொந்த ஊரான புதுக்கோட்டை நோக்கி தட்சிணாமூர்த்தி என்பவர் காரை ஓட்டி வந்த நிலையில் ஆர்எஸ் மங்கலம் கலக்குடி விலக்கு ரோடு அருகே கார் சென்று கொண்டிருந்த போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பாலத்தில் மோதி கார் கவிழ்ந்ததில் காரில் இருந்த தேவராஜ் மற்றும் ஓட்டுநர் தட்சணாமூர்த்தி ஆகிய இருவரும் காயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.