சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார் விழா மேடையில் பேசிய அவர் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்த மகளிருக்கும் தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தார். தற்போது தமிழகத்தில் ஒரு கோடியே 20 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படுவதாகவும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.