உளுந்தூர்பேட்டை அருகே ஆதனூர் குச்சிப்பாளையம் சாலை வளைவில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கோவிந்தன், பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பராயன் ஆகிய இருவரும் இன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.