காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம், பூக்கடைச்சத்திரம், வேதாச்சலம் நகர், பெரியார் நகர், டோல்கேட் பகுதி, ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெரு, நடுத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். சமீபத்தில் கூட காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகே ஒரே நாய், 20-க்கும் மேற்பட்ட நபர்களை கடித்த சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது