திண்டுக்கல் பகுதியில் உள்ள நல்லாம்பட்டி கிராமத்தில் மாசி மலையாள கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அமைப்பதற்காக ஒன்பது டன் எடை கொண்ட ஒரே கருங்கல்லில் ஒன்பது அடி உயரம் கொண்ட கருப்பண்ணசாமி மற்றும் மதுரை வீரன் குதிரை வாகன சிலைகள் மற்றும் விநாயகர் சிலைகள் முருகன் வள்ளி தெய்வானை என ஒன்பது சிலைகள் பழனியில் உள்ள சிற்பக் கலையகத்தில் கடந்த ஓராண்டாக வடிவமைக்கப்பட்டு வந்தது. பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று லாரிகள் மூலம் கோயிலுக்கு எடுத்து வந்தனர்.