புதூர் பூங்குளம் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் அந்த மனு மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் புதூர் பூங்குளம் வழியாக திருப்பத்தூர் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.