ஆர் எஸ் மங்கலம் தாலுகா அலுவலக ஜமாபந்தி வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்று கடைசி நாளான நிலையில் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் தாமதமாக வந்த காரணத்தால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் மனுக்களை கொடுக்க காத்திருந்தனர். இதனால் இப்பகுதியில் சல சல சலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் தாமதமாக வந்த வருவாய் கோட்டச்சியர் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.