ஆவணி மாத வளர்பிறையில் இறுதி முகூர்த்தம்; திருவந்திபுரத்தில் நடைபெற்ற 130 திருமணங்கள். ஆவணி மாதத்தில் இன்று வளர்பிறையில் இறுதி முகூர்த்த நாளாகும் இதனால் பல்வேறு இடங்களிலும் இன்று திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடலூர் திருவந்திபுரத்தில் அமைந்துள்ள தேவநாதசுவாமி கோவிலில் இன்று 130-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.