ராமநாதபுரம் ரோமன் சர்ச் அருகே காயக்காரி அம்மன் கோவில் தெரு பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலதிபர் ஒருவரின் கட்டிடங்கள் பழுதான நிலையில் அதில் குடியிருந்தவர்கள் காலியாகி சென்றுவிட்டனர். கட்டிடத்தின் உள்பகுதியில் நிறைந்திருந்த குப்பையில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ பரவி அந்த கட்டிடத்தின் முழுவதும் குப்பைகளில் பற்றி எரிந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து குப்பையில் பற்றிய தீயை அணைத்ததால் தீ அருகில் பரவாமல் தடுக்கப்பட்டது.