நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த கள்ளிமேடு ஊராட்சியில் உள்ள திரெளபதையம்மன் கோயில் உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கிய யாகசாலை பூஜை இன்று காலை நிறைவு பெற்று புனித நீர் கலசங்கள் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து வந்து விமான கலசத்திற்கும் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு