சிங்கம்புணரி அருகே மாந்தகுடிபட்டி அடைக்கலம் காத்த அய்யனார் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.குதிரை, யானை, காளை, மதலை, நாகம், பைரவர், எலி, பாதம், கண் உள்ளிட்ட புரவிகளை கிராம மக்கள் ஒன்றுகூடி, அரண்மனை குதிரை முன்னே செல்ல, நேர்த்திக்கடன் புரவிகளை சுமந்து அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலுக்கு எடுத்துச்சென்றனர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.