ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பள்ளூர் ஊராட்சியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பச்சை பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. தற்போது சிதலமடைந்து காணப்படும் இந்த கோவிலை 1.25 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றிய குழு பெருந்தலைவர் வடிவேலு கலந்து கொண்டு ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியது.