திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கற்பக விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு சென்று வர பாதை இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர், கோவிலுக்கு சென்று வர பாதை ஏற்படுத்தித் தரக்கோரி இந்து அறநிலைத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,