சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கனமழையால் சிங்கம்புணரி-பருவப்பட்டி நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. முழங்கால் அளவு நீர் தேங்கியதால் வாகனங்கள் நின்றன. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலைத்துறையும் பேரூராட்சியும் இணைந்து சாலையை உயர்த்தும் பணியை தீவிரமாக தொடங்கியுள்ளன. விரைவில் மழைநீர் வடிகால் உயர்த்தப்படும் என பேரூராட்சி தெரிவித்துள்ளது.