கோவை ராஜ வீதியில் ஆசிக் ஸ்டோர் என்ற மளிகை கடையை முஹம்மது தவ்பிக் என்பவர் நடத்தி வருகிறார்.அந்தக் கடையில் பணிபுரியும் சுரேஷ் என்பவர் கடையில் இருக்கும் லிப்டில் சென்ற போது எதிர்பாராத விதமாக லிஃப்ட் அறுந்து விழுந்தது. இந்த திடீர் விபத்தில் கடை ஊழியர் சுரேசிற்கு தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்