காரைக்குடி அருகே வேலங்குடி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கூடத்தில் இருந்து காளைகள் பூட்டப்பட்ட 21 மாட்டு வண்டிகளில் பயணத்தை துவக்கினர் குன்றக்குடி பிள்ளையார்பட்டி வழியாக இரவு எஸ்.எஸ்.கோட்டையில் தங்குகின்றனர் தொடர்ந்து 72 கி.மீ தூரம் பயணித்து நாளை நள்ளிரவு அழகர் கோயில் சென்றடைந்து 7ம் தேதி புனித நீரில் தீர்த்தமாடி கருப்பருக்கு கிடா வெட்டி விருந்து வைத்து அழகர் கோவில் தேரோட்ட நிகழ்வில் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தபின் சொந்த ஊர் திரும்புகின்றனர்.