திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே, ஏ.புதூரைச் சேர்ந்தவர் தலைமை ஆசிரியை வீட்டில் 70 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 2 லட்சத்தி 50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கடந்த 20 நாட்களாக கொள்ளையர்களை தேடி வந்த நிலையில், சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஆரோக்கிய ஜான் போஸ்கோ (42) என்பவரை, சென்னை தாம்பரம் அருகே சேலையூரில் அவரது நண்பர் ராஜேஷ் என்பவர் வீட்டில் பதுங்கி இருந்தபோது, தனிப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.