திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகுதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்கிட வேண்டும், அனைத்து ஊராட்சிகளும் வேலையை உடனடியாக துவங்கிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா தலைவர் அருள்சாமி தலைமையில் தாலுகா துணை தலைவர் ரெத்தினம், தாலுகா துணை செயலாளர் முருகன், தாலுகா துணை தலைவர் சகாய மாதா முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது