காடாம்புலியூரில் நாட்டு வெடி வெடித்த விபத்தில் நேற்று மாலை 5 மாணவர்கள் காயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் எஸ்.பி ஜெயக்குமார் நேரில் விசாரணை நடத்திய நிலையில் இதற்கு காரணமான 3 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் காட்டுப்பன்றியை விரட்ட பயன்படுத்துவதற்காக அவுட் காய் என்ற நாட்டு வெடி பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது.