தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் மாவட்ட காசநோய் மையம் திருவாரூர், ஒ என் ஜி சி காவேரி அசட் இணைந்து நடத்திய காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.இதில் திருவாரூர் மாவட்டம் முழுவதிலிருந்தும் வருகை தந்திருந்த காச நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.120க்கும் மேற்பட்ட காசநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இதில் கலந்து கொண்டனர் நன்னிலம் பகுதியை சேர்ந்த சிவகாமி என்கிற மூதாட்டி நன்றி கூறினார்